News & Events

சிறுவர் பூங்கா விடுவிப்பு

வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காங்கேசன்துறை மத்தி கிராம அலுவலர் (J/234) பிரிவில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ( 6.9 பேர்ச்) இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து மக்களின் பாவணைக்காக மீளவும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரத்தை இன்று காலை (10.06.2019) எமது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களிடம் 515 படைப்பிரிவின்  மக்கள் விவகார அதிகாரி கே. சத்யபால RSP அவர்களினால் உத்தியோகர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட வாரம் மரம் நடுகை

தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு உலகம் முழுவதுமாக மே மாதம் 30 திகதியிலிருந்து யூன் 05 திகதி வரை கடைப்பிடித்துவரும் உலக தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தின் நிகழ்வாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் செயற் திட்டங்களின் மற்றுமொரு செயற்றிட்டமாக  தையிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் மர நடுகையும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் 04.05.2019 புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 

62180036 404719900125376 4190125237339160576 n  61723595 404725163458183 7878044703285837824 n61897201 404719886792044 2366461988650876928 n  61644322 404725553458144 3542688269273661440 n 61734891 404726423458057 9077017040513925120 n 62499354 404724826791550 960118756242096128 n62215283 404719483458751 2489960062395613184 n  61933246 404725616791471 2807914056072036352 n

 

 

 

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட வாரம்

தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு உலகம் முழுவதுமாக மே மாதம் 30 திகதியிலிருந்து யூன் 05 திகதி வரை கடைப்பிடித்துவரும் உலக தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தின் நிகழ்வாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கடல் சார் வளங்களை பாதுகாத்தலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவகற்றலும் எனும் செயற்றிட்டம் மிகவும் சிறப்பாக 31.05.2019 வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

61777173 402548890342477 5047252524659113984 n  61709529 402548767009156 547955531101241344 n  61609364 402549877009045 5151618125417938944 n  61748144 402549537009079 7627739807480807424 n61417164 402549037009129 9090121797482840064 n  61769002 402548997009133 968100493400211456 n

 

சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு

நாடளாவிய ரீதியில் புதிய சமுர்த்திப் பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இடம் பெறும் நிகழ்ச்சியின் ஒரு கட்டமாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 4195 பயனாளிகளிற்கு உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வு 05.06.2019 வியாழக்கிழமை தெல்லிப்பளை யூனியன் கல்லுாரியில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலளாளர் திருமதி கோ.சங்கீதா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் அவர்களும் ஏனைய பிரமுகர்களும் சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் முகாமையாளர்களும் உத்தியோகத்தர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

61740504 405166936747339 1856221849571033088 n  61760798 405167250080641 6437591029590786048 n61762095 405167243413975 2842320493619445760 n  61830695 405166943414005 4638953653393162240 n61840791 405167573413942 826396963820797952 n  61933572 405167540080612 7106733886196940800 n62087835 405166920080674 5008180150605447168 n  62217316 405167220080644 5111196642007056384 n

கணனி உபயோகம் மூலம் பிறப்பு விவாகம் இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் புதிய சேவை ஆரம்பம்

 

பதிவாளர் நாயகத்தின் பிரதான அலுவலகத்தில் இதுவரை காலமும் நிலைப்படுத்தப்பட்டிருந்த பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்  உள்ளடக்கப்பட்ட  தரவு முறையினை உபயோகித்து இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்குமான பிறப்பு விவாகம் மற்றும்  இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்கும் புதிய மக்கள் சேவை 31.05.2019 திகதியன்று எமது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில்  எமது பிரதேச செயலக பிரதேச செயலாளலர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு பொது மக்கள் சிலருக்கு உத்தியோகபூர்வமாக சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதனூடாக மக்கள் நாட்டின் எப்பகுதியிலும் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை எமது பிரதேச செயலக பதிவாளர் பிரினூடாகப் பெற்றுக்கொள்ளப்பட முடியும்.

61792119 403131796950853 6365396340196769792 n61665007 403131790284187 2591976569446596608 n

 

Subcategories

Scroll To Top