News & Events
- Details
05.07.2026 ஆம் திகதி எமது பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இந்து கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யபட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய பிரதேசமட்ட ஆக்கத்திறன் நிகழ்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.



- Details
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற கலைஞர்களுக்கான மருத்துவ உதவித்திட்டத்தின் கீழ் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த கலைஞருக்கு மருத்துவ உதவித்தொகையான ரூபா 40,000/= காசோலை உதவிப் பிரதேச செயலாளர் அவர்களால் 03.07.2026 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

- Details
| அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ணத்தினை எமது தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் உடுவில் பிரதேச செயலகம் தம்வசப்படுத்திக்கொண்டன. |
|
2026ஆம் ஆண்டிற்கான யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகள் 04.07.2026 அன்று காலை 09.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது .இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டார்.மாவட்டச் செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்கள் முழுமையாக இப் போட்டியில் பங்குபற்றியது. 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ணத்தினை எமது தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் உடுவில் பிரதேச செயலகம் சம புள்ளிகள் பெற்று வெற்றியை பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.
|
- Details
பிரதேச தொழிற்சந்தை 2026 வெற்றிகரமாக நடைபெற்றது.
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் தெல்லிப்பழை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய “பிரதேச தொழிற்சந்தை 2026” நிகழ்வு 2026.06.24 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் 112 பயனாளிகள் மற்றும் 20 நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பின்வரும் முக்கிய சேவைகள் வழங்கப்பட்டன.
- தனியார் துறை வேலை வாய்ப்பு – பல முன்னணி நிறுவனங்களின் நேர்முகத்தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்புகள்.
- உயர்கல்விக்கான வழிகாட்டல் – உயர்கல்வி பாட நெறிகள், புலமைப்பரிசில்கள், வெளிநாட்டு கல்விச் சந்தர்ப்பங்கள் பற்றிய வழிகாட்டல்.
- தொழில்சார் கற்கை நெறிக்கான வழிகாட்டல் – தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கற்கை நெறிகள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் NVQ சான்றிதழ் தொடர்பான தகவல்கள்.
- சுயதொழில் முயற்சி ஆலோசனைகள் – சுயதொழில் ஆரம்பிக்கத் தேவையான ஆலோசனைகள், நிதி உதவிகள் மற்றும் அரசாங்க திட்டங்கள் பற்றிய தகவல்கள்.
அத்துடன் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள்.






- Details
The award ceremony for the productivity competition for the year 2020 organized by the National Productivity Secretariat among the government departments was held on 15.12.2022 at the Temple Tree. Tellipalai Divisional Secretariat won the first place nationally and received the award from Hon'ble Prime Minister Dinesh Gunawardena to Divisional Secretary Mr. Shanmugarasa Sivasri A group led by received.
![]() |
|
![]() |






















