தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் (NCPA) ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சமூக மாநாட்டில் (Child Protection Community Symposium 2026) தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவின் இளவாலை கிராம சிறுவர் பாதுகாப்பு வலையமைப்பைப் (Ilavalai village Child Protection Network) பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று திறமைமிகு மாணவர்கள் பங்குபற்றினர்.
இம்மாநாட்டின் ஓர் அங்கமாக கொழும்பு Srilanka Foundation இல் 30.10.2026 நடைபெற்ற தேசிய மட்டத் போட்டியில்(தமிழ் மொழிமூலப்), இளவாலை கிராம மட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முன்வைப்பை (Presentation) மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்கள்:
செல்வன் பி. தர்சன் ( தரம்-11)
(யா / மகாஜனக் கல்லூரி)
செல்வன் ம. சாருஜன் ( தரம் -9)
(யா / அருணோதயக் கல்லூரி)
செல்வி ச. திலோஜி ( தரம் -11)
(யா/ இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்)
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, இளவாலை கிராமத்துக்கும், கல்வி கற்கும் பாடசாலைகளுக்கும், தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் திறமையும் ஆளுமையும் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம்.
இந்த மாபெரும் கூட்டு முயற்சிக்கு உறுதுணையாக நின்று வழிகாட்டிய மதிப்புக்குரிய தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர்,மதிப்புக்குரிய அதிபரும் ஆசிரியருமான திரு.ஜெ. ஜெயகிறிஸ்ரோ ( யா/வலித்தூண்டல் றோ.க.த பாடசாலை)( Study Center நிர்வாகி) மற்றும் அன்புள்ள பெற்றோர்கள் ,பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்ததருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் .

























