News & Events
- විස්තර
UNDP நிறுவனத்தின் உதவியில் வாழ்வாதாரக் உதவிக்கொடுப்பனவு
UNDP நிறுவனத்தின் RNRL நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மற்றும் EU நிகழ்ச்சித் திட்டத்தின் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளின் தொடர்ச்சியான வாழ்வாதார உதவியாக J/254 கிராம அலுவலர் பிரிவில் 07 பயனானிகளுக்கும் மற்றும் J/250 கிராம அலுவலர் பிரிவில் 01 பயனானிக்குமாக மொத்தம் 08 பயனாளிகளுக்கான மீன்பிடி படகின் வெளி இணைப்பு இயங்திரங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் நோக்கமாக அப் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேலும் மேம்படுத்துவதற்காகவே இவ் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. ஒரு இயந்திரத்தின் பெறுமதியானது ரூபா 300.000.00 (மூன்று இலட்சம்) ஆகும்.
அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்ட வாழ்வாதார உதவியில் மீள்குடியேறாத மற்றும் வீட்டுத் திட்டங்களை பூர்த்தியாக்காத பயனாளிகளுக்கான தடுத்துவைக்கப்பட்ட ரூபா 150.000.00 பெறுமதியான வலைத்தொகுதியொன்றும் எமது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களின் தலமையில் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் எமது பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளரும் மற்றும் உத்தியோகத்தர்களுடன் UNDP நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.










.
- විස්තර
2019.04.21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட மிகக்டூரமான குண்டுத்தாக்குதலினால் உயிர் நீத்தவர்களிற்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் காயமடைந்தவர்கள் குணமடைவதற்கான பிரார்த்தனையும்





2019.04.21ம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டிலுள்ள பல பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களினால் நாடளாவிய ரீதியில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் உயிர்நீத்த உள்நாட்டு, வெளிநாட்டு பிரஜைகளிற்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், காயமடைந்தவர்கள் குணமடைவதற்கான பிரார்த்தனையும் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.05.08ந் திகதி காலை நடைபெற்றது. பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து கிறீஸ்தவ மதத்தலைவர்கள், பல சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
- විස්තර
DIVISIONAL SPORTS FESTIVAL - 2019
DATE - 22.03.2019 (FRIDAY)
TIME - 2.30PM
PLACE - J/ MAHAJANA COLLEGE


- විස්තර
வடமாகாண தொழிற்றுறை திணைக்களத்தின் அனுசரணையுடன்
வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும்
தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனைச் சந்தை - 2019
![]()
- විස්තර
பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் சேவைகளை புத்தாக்கம் கொண்டதாக மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய விழாவொன்றினை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆந் திகதியன்று மு.ப 9.30 மணிக்கு பத்தரமுல்லை பதிவாளர் நாயகத் திணைக்களத்தில்...
















