News & Events

Special Weather Alert

தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளின் மையப் பகுதிகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தயடைந்துள்ளது.
இது அடுத்த 24-48 மணத்தியாலத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக மேலும் விருத்தியடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் 2020 நவம்பர் 24ஆம், 25ஆம் திகதிகளில் இலங்கையின் வட கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக கிழக்கு, வடக்கு, வட-மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
வெளியிடப்பட்டது 22.11.2020 காலை 5.30 மணி

72nd Independence Day celebration under the theme of "A Secured Nation – A Prosperous Country" was held on 4th of February 2020 at the Divisional Secretariat premises.The event was commenced with hoisting of National Flag by Divisional Secretary Mr. S. Sivasri, followed by singing of the National Anthem.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டிற்கான தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக 10.01.2020, 11.01.2020, மற்றும் 12.01.2020 ஆம் திகதிகளில் ஆண்கள் பெண்களுக்கான கரப்பந்தாட்டம், எல்லே, கரம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. அனைத்து கழகங்களும் பங்குபற்றியதுடன் போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான தைத்திருநாள் கொண்டாட்டமானது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் 2020 ம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வுகளாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களோடு அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டிற்கான தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளானது 04.01.2020 சனிக்கிழமை ஆரம்பமானது. 4, 5 ஆம் திகதிகளில் ஆண்கள் பெண்களுக்கனா உதைபந்தாட்டம், கராத்தே, கபடி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. அனைத்து கழகங்களும் பங்குபற்றியதுடன் போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.

අනු-ප්‍රවර්ගයන්

Scroll To Top