News & Events

கலாசார விழா - 2019

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார விழா 2019 மிகச் சிறப்பாக 04.10.2019 வெள்ளிக்கிழமை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு. சண்முகராசா சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு. இ. இளங்கோவன் (செயலாளர் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடமாகாணம்) மற்றும் சிறப்பு விருந்தினராக  திரு சி. ரமணராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் இந்துநாகரீகத்துறை இந்து கற்கைகள்பீடம் யாழ் பல்கலைக்கழகம்) அத்துடன் கௌரவ விருந்தினர்களாக திரு. தி. வரதன் (அதிபர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி) மற்றும் கலாபூசணம் மு. சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் சிறப்பான கலை நிகழ்வுகளோடு கலைஞர் கௌரவிப்பும் இடம்பெற்றது.

கலாசார விழா - 2019

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார விழா.

சட்ட ஆவணங்களை வழங்கும் விசேட நடமாடும் சேவை

தேசிய ஒருமைப்பாடு. அரச கரும மொழிகள். சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் சட்ட ரீதியான ஆவணங்களை  பொதுமக்களிற்காக இலவசமாக வழங்கும் விசேட நடமாடும் சேவை  25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பி.ப 3.30 மணி வரை மல்லாகம் மகா வித்தியாலயத்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நடமாடும் சேவையில் பெற்றுக் கொண்ட சேவைகள்

01) பிறப்புச் சாண்றிதழ்களை சட்டரீதியாக மொழி பெயர்த்துக் கொடுத்தல்(ஆங்கிலம்/ சிங்களம் /தமிழ்)
02) பிறப்புச் சாண்றிதழ்களில் உள்ள பிழைகளை அடையாளம் கண்டு திருத்திக் கொடுத்தல்
03) பிறப்புச் சாண்றிதழின் புதிய பிரதியை வழங்குதல்
04) விவாகமாகாத தம்பதியினரை சட்டபூர்வமாக விவாகம் செய்து வைத்தல்
05) பிறப்பு சாண்றிதழ் இல்லாதவர்களிற்கு அனுமான சாண்றிதழ் வழங்குதல்
06) தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுத்தல்
07) அரச காணி தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
08) கமநல சேவை தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
09) ஊழியர் சேமலாப நிதித் தொகை விசாரணைகள், கடன் வசதி பெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
10) சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக இலவச சட்ட உதவி
11) வரிப்பணம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
12) அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
13) ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
14) நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு

இச் சேவையின் ஊடாக மக்கள் நிறைவான பயனுள்ள சேவையினைப் பெற்றுக் கொண்டனர்.

68812594 447081805889185 5697477742543503360 n  69043207 447082375889128 6739318276045668352 n  69518554 447082522555780 11171892836696064 n  68904223 447086269222072 4254747551497977856 n  68886816 447082832555749 8899901707442454528 n  69067251 447082652555767 4209928386648211456 n  69073083 447082932555739 1125579111440318464 n  69462825 447086249222074 4880956300105613312 n  69153978 447115772552455 1293972710258376704 n  69227723 447115792552453 1977330774742925312 n  68784536 447115759219123 2005055626157228032 n  68918520 447082539222445 7554359509544599552 n

 

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்”
ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்ட 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' செயற்றிட்டத்தின் கீழ் 23.08.2019 அன்றிலிருந்து 30.08.2019 வரையிலான தினங்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக நடாத்தப்பட்ட நிகழ்வுகளில் எமது பிரதேச செயலகத்தினால் (வலி வடக்கு – தெல்லிப்பளை) பின்வரும் தலைப்புக்களில் ஏறத்தாழ 846 நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. 
 
போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
அறியப்படாத சிறுநீரக நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
மரம் நடுகை
முதியோருக்கான மருத்துவ முகாம்
மாற்றுவலு உடையோருக்கான உபகரணங்கள் வழங்கல்
மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல்
உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சி
தகவல் அறியும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேசிய அடையாள அட்டை பதிவுக்கான நடமாடும் சேவை
பிறப்புச் சான்றிதழுக்கான பதிவு
திருமணப் பதிவு
தென்னங்கன்று மற்றும் மாங்கன்று வழங்கல்
தண்ணீர் தாங்கி வழங்கல்
'ஜனாதிபதியிடம் தெரிவித்தல்' நிகழ்வு
விவசாய உபகரணங்கள் வழங்கல்
விவசாயிகளுக்கான வங்கிக் கடன் வழங்கல்
கால்நடைகளுக்கான கொட்டகை அமைத்தமைக்கான காசோலை வழங்கல்
தொழில்நுட்பம் சார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கர்ப்பிணித் தாய்மாருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிரமதானம்
 
Image 18  Image 112  Image 19  Image 1  Image 2  Image 11  Image 12  Image 13  Image 110  Image 111  Image 113  Image 116Image 114  Image 117  Image 118  Image 119  Image 119  Image 120
 
 

மயிலிட்டி வடக்கு கிராமச் செயலகம் புதிய கட்டடம் திறப்பு

மீள்குடியேற்றப் பகுதியான மயிலிட்டி வடக்கு பகுதி மக்களின் சேவைகளை நிறைவேற்றுமுகமாக அப்பகுதி மக்களுக்கான கிராமச் செயலகம் 27.08.2019 அன்று பாவனைக்காக திறந்து வைக்கப்பட;டுள்ளது. 

இந் நிகழ்வானது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு நா. வேதநாயகன் அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அக் கட்டடத்தினை மக்கள் பாவனைக்காகவும் திறந்து வைத்து உரையாற்றினார். 

இக் கட்டடமானது  6.5 மில்லியன் நிதிப் பங்களிப்பில் UNDP நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில்  தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பரதேச செயலாளர் திருமதி ச. கோகுலதர்சன் மற்றும் கணக்காளர் ப. கஜேந்திரன் அவர்களும் மற்றும்  UNDP நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு. முகுந்தன் அவர்ளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

69150602 448173969113302 8791713358156922880 n  69410468 448174089113290 8271198540613550081 n  69095544 448174162446616 2692674371213852672 n      69466592 448174282446604 634957326406647808 n  69463070 448174405779925 3406421657189875712 n  68995118 448174529113246 7038916670420680704 n

අනු-ප්‍රවර්ගයන්

Scroll To Top