மயிலிட்டி வடக்கு கிராமச் செயலகம் புதிய கட்டடம் திறப்பு

மீள்குடியேற்றப் பகுதியான மயிலிட்டி வடக்கு பகுதி மக்களின் சேவைகளை நிறைவேற்றுமுகமாக அப்பகுதி மக்களுக்கான கிராமச் செயலகம் 27.08.2019 அன்று பாவனைக்காக திறந்து வைக்கப்பட;டுள்ளது. 

இந் நிகழ்வானது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு நா. வேதநாயகன் அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அக் கட்டடத்தினை மக்கள் பாவனைக்காகவும் திறந்து வைத்து உரையாற்றினார். 

இக் கட்டடமானது  6.5 மில்லியன் நிதிப் பங்களிப்பில் UNDP நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில்  தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பரதேச செயலாளர் திருமதி ச. கோகுலதர்சன் மற்றும் கணக்காளர் ப. கஜேந்திரன் அவர்களும் மற்றும்  UNDP நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு. முகுந்தன் அவர்ளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

69150602 448173969113302 8791713358156922880 n  69410468 448174089113290 8271198540613550081 n  69095544 448174162446616 2692674371213852672 n      69466592 448174282446604 634957326406647808 n  69463070 448174405779925 3406421657189875712 n  68995118 448174529113246 7038916670420680704 n

Scroll To Top