யாழ் அரச அதிபர் கிண்ணம் 2019

யாழ் அரச அதிபர் கிண்ணம் 2019 இறுதிப் போட்டி 01.08.2019 அன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச அதிபர் மதிப்பிற்குரிய திருவாளர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் பிரதம அதீதியாக கலந்து சிறப்பிக்க மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் அரச அதிபர் போட்டியில் யாழ் மாவட்டச் செயலகமும் 15 பிரதேச செயலகங்களும்  போட்டிகளில் கலந்து கொண்டன. இப் போட்டிகளின் புள்ளிகளின் அடிப்படையில் யாழ் மாவட்டச் செயலகம் முதலாமிடத்தையும் எமது தெல்லிப்பளை பிரதேச செயலகம் 2ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது. எமது பிரதேச செயலகம் எமது பிரதேச செயலாளர் திரு ச. சிவஶ்ரீ அவர்களின் வழிகாட்டலிலும் ஊக்கப்படுத்தலிலும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பிலும் தொடர்ச்சியாக 3 வருடங்களாக 2 ம் இடத்தினையும் பிரதேசங்களின் மத்தியில் 1ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

67434236 435069310423768 562750628284071936 n  67444765 435069087090457 1049971718342311936 n

67614520 435069007090465 4522295065959202816 n  67710655 435069377090428 3026945765986533376 n

67873526 435070090423690 7336055500234031104 n

Scroll To Top