பிரதேச தொழிற்சந்தை 2026 வெற்றிகரமாக நடைபெற்றது.

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் தெல்லிப்பழை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய “பிரதேச தொழிற்சந்தை 2026” நிகழ்வு  2026.06.24 அன்று  வெற்றிகரமாக நடைபெற்றது. 

தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் 112 பயனாளிகள் மற்றும் 20 நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பின்வரும் முக்கிய சேவைகள் வழங்கப்பட்டன.

  1.  தனியார் துறை வேலை வாய்ப்பு – பல முன்னணி நிறுவனங்களின் நேர்முகத்தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்புகள்.
  2.  உயர்கல்விக்கான வழிகாட்டல் – உயர்கல்வி பாட நெறிகள், புலமைப்பரிசில்கள், வெளிநாட்டு கல்விச் சந்தர்ப்பங்கள் பற்றிய வழிகாட்டல்.
  3.  தொழில்சார் கற்கை நெறிக்கான வழிகாட்டல் – தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கற்கை நெறிகள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் NVQ சான்றிதழ் தொடர்பான தகவல்கள்.
  4. சுயதொழில் முயற்சி ஆலோசனைகள் – சுயதொழில் ஆரம்பிக்கத் தேவையான ஆலோசனைகள், நிதி உதவிகள் மற்றும் அரசாங்க திட்டங்கள் பற்றிய தகவல்கள்.

அத்துடன் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள்.

jobfair 6jobfair1jobfair2jobfair3jobfair4jobfair5

 



Scroll To Top