யாழ் மாவட்டத்திற்குட்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  பிரதேசவாரியாக  நடைபெற்று வரும் நிலையில் 29.01.2021 செவ்வாய்க்கிழமை காலை தெல்லிப்பளை  பிரதேச  செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒழுங்கிணைப்பு குழுத்தலைவருமான   கெளரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ எம் .ஏ சுமந்திரன், கெளரவ பொன்னம்பலம் கஜேந்திரகுமார், கெளரவ செல்வராசா கஜேந்திரன், கெளரவ  வலிக்காம வடக்கு   பிரதேச சபை  தவிசாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ் .முரளிதரன் எமது பிரதேச  செயலாளர் திரு சண்முகராஜா சிவஸ்ரீ, எமது பிரதேச  செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக மட்ட  அமைப்பின் பிரிதிநிதிகள் முப்படையினர், என பலதரப்பினர் பங்கேற்புடன் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் Covid -19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மக்களின் திண்ம கழிவகற்றல், சுகாதார பிரச்சினைகள், வீதி அபிவிருத்தி, மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி, தொல்பொருள் சம்பந்தமான விடயங்கள், ஆலய அபிவிருத்தி தொடர்பான பல்வேறுபட்ட  விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Scroll To Top