தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீளக் குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசத்திற்கான பொதுமக்களில் BC படிவம் சமர்ப்பிக்காதவர்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே BC படிவம் சமர்ப்பிக்காதவர்கள் தற்போது தேர்தல்கள் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியலை பார்வையிட்டு 2020ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை உட்சேர்ப்பதற்கு பின்வரும் நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும். 

  1. 2020ம் ஆண்டிற்கான தேருனர் இடாப்பில் தனது பெயர் சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதா என அறிய முடியும்.
  2. பதிவு செய்வதற்கு தகமை இருந்தும் பதிவு செய்வதற்கு தனது பெயர் சிபாரிசு செய்யப்படவில்லை எனின் தனது பெயர் பதிவதற்கு உரிமை கோரிக்கை படிவத்தை சமர்ப்பிக்க முடியும்.
  3. பதிவு செய்வதற்கு பிழையான பெயர் ஒன்று சிபார்சு செய்யப்பட்டிருந்தால் அது தொடர்பாக ஆட்சேபனையினை சமர்ப்பிக்க முடியும்.
  4. உரிமைக் கோரிக்கை, ஆட்சேபனையினை தெரிவித்தலுக்கான படிவங்களை காட்சிப்படுத்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
  5. ஆட்சேபனையினை தெரிவித்தலுக்கான படிவம் இரு பிரதிகள் தயார் செய்தல் வேண்டும்.
  6. மேற்படி படிவங்கள் கிராம அலுவலர் மூலம் சிபார்சு செய்யப்பட்டு பிரதேச செயலகத்தில் அல்லது மாவட்ட செயலாளருக்கு அல்லது மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் உதவிப் பதிவாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்

2020ம் ஆம் ஆண்டிற்கான தேருனர் இடாப்பில் பெயர் சேர்ப்பதற்கான இறுதி திகதி 2021.02.01 ஆகும்.

Scroll To Top