தெல்லிப்பளை பிரதேச செயலக 2021ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (01.01.2021) காலை தெல்லிப்பளை பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், மௌன அஞ்சலி மற்றும் சத்தியப்பிரமாணம் ஆகியனவும் இடம்பெற்றிருந்தது.


நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ அவர்கள் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் அதிமேதகு ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடனங்களுக்கு அமைய உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தலின் அவசியத்தை வலியுறுத்தி தெரிவித்தார். மேலும் Covid 19 தொற்று வைரஸ் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர் விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிரவாக உத்தியோகத்தர்,பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.

Scroll To Top