தெல்லிப்பளை பிரதேச வாழ் மக்களே

தற்போது எமது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் மேற்கு, கொல்லங்கலட்டி, அளவெட்டி, தெல்லிப்பளை, கூவில் ஆகிய பிரதேசங்களில் 8 கொரோணா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இத் தொற்றானது மேலும் அதிகளவில் பரவலடையாதிருப்பதற்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறும் தேவையற்ற விதத்தில் வீடுகளை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்தும் கொரோணா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும், தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதன் பொருட்டு வீட்டை விட்டு செல்வதாயின் வெளியில் செல்லும்போதே சகல தேவைகளையும் ஒரே தடவையில் பூர்த்தி செய்யும் விதமாக திட்டமிட்டு குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர் மட்டும் சென்று வருமாறும் பொதுப் போக்குவரத்துக்களை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுமாறு தங்களை மிகவும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்ந்து வரும் நாட்களை மிகவும் பாதுகாப்புடன் கழிக்குமாறு தங்களை கேட்டுக் கொள்வதுடன் தங்களது முழுமையான ஒத்துழைப்பினை நாம் தயவுடன் வேண்டி நிற்கின்றோம்.

Scroll To Top