தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளின் மையப் பகுதிகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தயடைந்துள்ளது.
இது அடுத்த 24-48 மணத்தியாலத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக மேலும் விருத்தியடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் 2020 நவம்பர் 24ஆம், 25ஆம் திகதிகளில் இலங்கையின் வட கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக கிழக்கு, வடக்கு, வட-மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
வெளியிடப்பட்டது 22.11.2020 காலை 5.30 மணி

Scroll To Top