2020 ம் ஆண்டிற்கான கடமை ஆரம்பிக்கும் நிகழ்வானது காலை 9:30 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமானது முதல் நிகழ்வாக தேசிய கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்று அதனைத் தொடர்ந்து தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. அடுத்த நிகழ்வாக பிரதேச செயலாளரால் மரக்கன்று நடும் நிகழ்வு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

 
3
3
 
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வும் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வும் சுபீட்சமான இலங்கையினுள் திறமையான வினைத்திறன் மிக்க பிரஜை, சந்தோசமாக வாழும் குடும்பம், ஒழுக்க விழுமியமிக்க சிறந்த பண்புகளைக் கொண்ட சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான ஆளணியினர் அனைவரினதும் பங்களிப்பினை நேர்மையாகவும் தாமதமின்றியும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிறுவனத்தின் தலைவராகிய பிரதேச செயலாளரின் சிறப்புரையும் இடம்பெற்றது. அத்துடன் பதவி நிலை உத்தியோகத்தர்களினதும் ஏனைய உத்தியோகத்தர்களினதும் வாழ்த்து செய்திகளுடனும் நிறைவு பெற்றது.
 
3
3
 
Scroll To Top