உத்தியோகத்தர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையினை ஏற்படுத்துவதற்காகவும் வேலைச்சூழலுக்கு ஏற்ற வகையில் தம்மை தயார்ப்படுத்தி வேலையினை வினைத்திறனான முறையில் புரிவதற்கும் ஏற்ற வகையில் பிரதேச செயலாளரின் ஏற்பாட்டிலும் அவரது தலைமையிலும் பிரதேச செயலக உத்தியோத்தர்களுக்கான ஆன்மீக கருத்தரங்கு தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்க வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்தவர் சின்மயா விஷன் சுவாமி, சுவாமி சிதாகாசானந்தா அவாகள். சுவாமிகள் சிறந்த கருத்துக்களை வழங்கியதுடன் உத்தியோகத்தர்களால் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு சிறந்த முறையில் கருத்துக்களையும் வழங்கியிருந்தார். இந் நிகழ்வில் உததியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டதுடன் பயனையும் பெற்றனர்.

74465173 491147084815990 1339057201007820800 o  74888350 491147151482650 4303774985433907200 o  74164977 491147058149326 939813409292025856 o  75398209 491147204815978 8056673986559344640 o  76257495 491147111482654 3864685712666263552 o

Scroll To Top