“நாட்டுக்காக ஒன்றிணைவோம்”
ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்ட 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' செயற்றிட்டத்தின் கீழ் 23.08.2019 அன்றிலிருந்து 30.08.2019 வரையிலான தினங்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக நடாத்தப்பட்ட நிகழ்வுகளில் எமது பிரதேச செயலகத்தினால் (வலி வடக்கு – தெல்லிப்பளை) பின்வரும் தலைப்புக்களில் ஏறத்தாழ 846 நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
• போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
• டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
• சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
• அறியப்படாத சிறுநீரக நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
• சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
• மரம் நடுகை
• முதியோருக்கான மருத்துவ முகாம்
• மாற்றுவலு உடையோருக்கான உபகரணங்கள் வழங்கல்
• மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல்
• உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சி
• தகவல் அறியும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
• தேசிய அடையாள அட்டை பதிவுக்கான நடமாடும் சேவை
• பிறப்புச் சான்றிதழுக்கான பதிவு
• திருமணப் பதிவு
• தென்னங்கன்று மற்றும் மாங்கன்று வழங்கல்
• தண்ணீர் தாங்கி வழங்கல்
• 'ஜனாதிபதியிடம் தெரிவித்தல்' நிகழ்வு
• விவசாய உபகரணங்கள் வழங்கல்
• விவசாயிகளுக்கான வங்கிக் கடன் வழங்கல்
• கால்நடைகளுக்கான கொட்டகை அமைத்தமைக்கான காசோலை வழங்கல்
• தொழில்நுட்பம் சார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
• கர்ப்பிணித் தாய்மாருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
• சிரமதானம்


















