சட்ட ஆவணங்களை வழங்கும் விசேட நடமாடும் சேவை

தேசிய ஒருமைப்பாடு. அரச கரும மொழிகள். சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் சட்ட ரீதியான ஆவணங்களை  பொதுமக்களிற்காக இலவசமாக வழங்கும் விசேட நடமாடும் சேவை  25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பி.ப 3.30 மணி வரை மல்லாகம் மகா வித்தியாலயத்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நடமாடும் சேவையில் பெற்றுக் கொண்ட சேவைகள்

01) பிறப்புச் சாண்றிதழ்களை சட்டரீதியாக மொழி பெயர்த்துக் கொடுத்தல்(ஆங்கிலம்/ சிங்களம் /தமிழ்)
02) பிறப்புச் சாண்றிதழ்களில் உள்ள பிழைகளை அடையாளம் கண்டு திருத்திக் கொடுத்தல்
03) பிறப்புச் சாண்றிதழின் புதிய பிரதியை வழங்குதல்
04) விவாகமாகாத தம்பதியினரை சட்டபூர்வமாக விவாகம் செய்து வைத்தல்
05) பிறப்பு சாண்றிதழ் இல்லாதவர்களிற்கு அனுமான சாண்றிதழ் வழங்குதல்
06) தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுத்தல்
07) அரச காணி தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
08) கமநல சேவை தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
09) ஊழியர் சேமலாப நிதித் தொகை விசாரணைகள், கடன் வசதி பெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
10) சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக இலவச சட்ட உதவி
11) வரிப்பணம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
12) அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
13) ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
14) நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு

இச் சேவையின் ஊடாக மக்கள் நிறைவான பயனுள்ள சேவையினைப் பெற்றுக் கொண்டனர்.

68812594 447081805889185 5697477742543503360 n  69043207 447082375889128 6739318276045668352 n  69518554 447082522555780 11171892836696064 n  68904223 447086269222072 4254747551497977856 n  68886816 447082832555749 8899901707442454528 n  69067251 447082652555767 4209928386648211456 n  69073083 447082932555739 1125579111440318464 n  69462825 447086249222074 4880956300105613312 n  69153978 447115772552455 1293972710258376704 n  69227723 447115792552453 1977330774742925312 n  68784536 447115759219123 2005055626157228032 n  68918520 447082539222445 7554359509544599552 n

 

Scroll To Top