23.10.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றிருந்த 2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு விழாவில் நமது  பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த மூத்த கலைஞர் ஆன சங்கரப்பிள்ளை கிருபானந்தன் அவர்கள் இசை நாடக துறைக்கான “யாழ் முத்து” விருதினையும்   இளவாலை வடக்கை  சேர்ந்த பிரான்சிஸ் சகாயநாதன் ஆண்டனி  ரோய்  அவர்களுக்கு  வாத்திய கலைக்கான “இளம் கலைஞர்” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இதழ் 5 மலர் வெளியீடும் இடம் பெற்றிருந்தது இதில் எமது பிரதேசத்தில் எழுத்தாளர்களான  கோகிலா   மகேந்திரன் மற்றும் கோபிகா  ஆகியோர்களுடைய கட்டுரைகளும் கொல்லங்கட்டியைச் சேர்ந்த குக தேவன்  அவருடைய கவிதை ஒன்று நூலில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  மேலும் இந்த நிகழ்வில் ஊர்வலங்களில் எமது  மாவை பொதுச் சேவை கழகத்தினுடைய கலைஞர்களுடைய கோலாட்ட நிகழ்வும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

jaffnacultralevent2jaffnacultralevent1jaffnacultralevent3jaffnacultralevent

 

Scroll To Top