News & Events
- Details
உள்விவகார அலகு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஊழல் தொடர்பான செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு .கைலாசபிள்ளை சிவகரன் அவர்களினால் பிரதேச மாநாடு மண்டபத்தில் 05.10.2026 ஆம் திகதி 9.00 மணிக்கு இடம்பெற்றது.



- Details
04.10.2026 ஆம் திகதி யா/மல்லாகம் மகாவித்தியாலயத்தில் தேசிய ஆக்கத்திறன் போட்டி நிகழ்வுகளான "சித்திரம் மற்றும் கட்டுரை" போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.அதன் பதிவுகள் சில.......


- Details
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நிதி அனுசரணையில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒழுங்குபடுத்தலுக்கமைவாக 30.09.2026 ம் திகதி முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

- Details
03.10.2026 ஆம் திகதி தேசிய ஆக்கத்திறன் வடக்கு மாகாண மட்ட போட்டிகள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற எமது பிரிவினைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் பங்குபற்றியிருந்தார்கள்.
- Details
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட கௌரவிப்பு விழா 2026.09.30 ம் திகதி புதன்கிழமை வவுனியாவில் ஹோட்டல் செல்வஜீவிதம் மண்டபத்தில் நடைபெற்றது.சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கங்களை மக்களிடையே சிறப்பாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் முன்னெடுத்தல் போன்றவற்றில் தேசியமட்டத்தில் சிறப்பிடத்தை பெற்றுக்கொண்டமைக்காக தெல்லிப்பழை பிரதேச செயலகம் கௌரவிக்கப்பட்டது.


















