News & Events
- විස්තර
11.08.2026 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 9.00 ஆரம்பமான இந்நிகழ்வில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், பாரம்பரிய உணவுகளை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நோக்கிலும், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்த விற்பனைச் சந்தை நடைபெற்றது .


- විස්තර
15.08.2026 மற்றும் 16.08.2026 ஆம் திகதிகளில் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் 2024,2025 ஆம் ஆண்டுகளிற்கான தேசிய ஆக்கத்திறன் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அவ்வகையில்,எமது பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை மாணவர்களும் வெற்றி பெற்று பரிசில்களை பெற்றுக்கொண்டார்கள்.




- විස්තර
தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.08.2026 ஆந் திகதி நீர்வளசபையினால் நிலத்தடி நீர் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.இதில் நிலத்தடி நீர் தொடர்பான முக்கியத்துவம் மற்றும் சபையின் சேவைகள் செயல்பாடுகள் குழாய்கிணறு கட்டுமானம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.



- විස්තර
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத்தில் சமூகங்களிற்கும் கள அலுவலர்களுக்குமான சமூக உற்பத்தி திறனின் 6 முக்கிய கூறுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 13/8/2026 கல்லாரை கிராமத்தில் நடாத்தப்பட்டது.

- විස්තර
தேசிய இளையோர் பெண்கள் உதைபந்தாட்டப் போட்டி வெற்றியாளர்களான யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணியினருக்கான கெளரவிப்பு விழா கருகம்பானையில் 08.08.2026 ஆந் திகதி நடைபெற்றது இவ் அணியின் 12வீரங்கனைகள் எமது பிரதேசத்தை சார்ந்தவர்கள் .





















