எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

​தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் (NCPA) ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு தொடர்பான  சமூக மாநாட்டில் (Child Protection Community Symposium 2026) தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவின் இளவாலை கிராம சிறுவர் பாதுகாப்பு வலையமைப்பைப் (Ilavalai village Child Protection Network) பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று திறமைமிகு மாணவர்கள் பங்குபற்றினர்.

​இம்மாநாட்டின் ஓர் அங்கமாக கொழும்பு Srilanka Foundation இல் 30.10.2026 நடைபெற்ற தேசிய மட்டத்  போட்டியில்(தமிழ் மொழிமூலப்), இளவாலை கிராம மட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முன்வைப்பை (Presentation) மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்கள்:

செல்வன் பி. தர்சன் ( தரம்-11) 

(யா / மகாஜனக் கல்லூரி)

செல்வன் ம. சாருஜன் ( தரம் -9)

(யா / அருணோதயக் கல்லூரி)

செல்வி ச. திலோஜி ( தரம் -11)

(யா/ இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்)

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, இளவாலை கிராமத்துக்கும், கல்வி கற்கும் பாடசாலைகளுக்கும், தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் திறமையும் ஆளுமையும் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம்.

இந்த மாபெரும் கூட்டு முயற்சிக்கு உறுதுணையாக நின்று வழிகாட்டிய மதிப்புக்குரிய தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர்,மதிப்புக்குரிய அதிபரும் ஆசிரியருமான  திரு.ஜெ. ஜெயகிறிஸ்ரோ   ( யா/வலித்தூண்டல் றோ.க.த பாடசாலை)( Study Center நிர்வாகி) மற்றும் அன்புள்ள பெற்றோர்கள் ,பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்ததருக்கும்  நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் .

ncpa awardncpa award1

 

 

 

 

News & Events

09
நவ2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்-சேந்தான்குளம்.

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்-சேந்தான்குளம்.

சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு “கிளீன் ஸ்ரீலங்கா”...

06
நவ2026
இளைஞர்களின் தொழில்திறன் மேம்பாட்டிற்கான “Door to Door Skills Campaign” – முதற்கட்ட நிகழ்வு.

இளைஞர்களின் தொழில்திறன் மேம்பாட்டிற்கான “Door to Door Skills Campaign” – முதற்கட்ட நிகழ்வு.

இளைஞர்களின் தொழில்திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும்...

04
நவ2026
உளவளத்துணையும் பொதுமக்களுடனான ஆளுமையான உறவுமுறையும் தொடர்பாடலும் கருத்தரங்கு .

உளவளத்துணையும் பொதுமக்களுடனான ஆளுமையான உறவுமுறையும் தொடர்பாடலும் கருத்தரங்கு .

"உளவளத்துணையும் பொதுமக்களுடனான ஆளுமையான உறவுமுறையும் தொடர்பாடலும்" கருத்தரங்கு 28.10.2026...

02
நவ2026
கலாசாரப்பிரிவின் ஒழுங்குபடுத்தலின் பிரகாரம், நேர்மைக்கலாசாரம் நிகழ்ச்சித்திட்டம்.

கலாசாரப்பிரிவின் ஒழுங்குபடுத்தலின் பிரகாரம், நேர்மைக்கலாசாரம் நிகழ்ச்சித்திட்டம்.

2026.10.23 ஆந் திகதியன்று  கலாசாரப்பிரிவின் ஒழுங்குபடுத்தலின் பிரகாரம், நேர்மைக்கலாசாரம்...

02
நவ2026
பாராட்டுதல் பரிசளித்தல் மகிழ்வூட்டலும் நிகழ்வு

பாராட்டுதல் பரிசளித்தல் மகிழ்வூட்டலும் நிகழ்வு

உளநல நாளை முன்னிட்டு 16.10.2026 நடாத்தப்பட்ட நிகழ்விற்கான "பாராட்டுதல்...

02
நவ2026
யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா – 2026

யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா – 2026

23.10.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டச் செயலகக்...

30
அக்2026
சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

2026.10.23 ஆந் திகதி யா/ நடேஸ்வரா கனிஷ்ட  வித்தியாலய...

Scroll To Top