எமது தொலைநோக்கு
பிரதேச மக்களுக்கு நவீன தொழில் நுட்பத்துடன் உன்னதமான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சேவையை உறுதிசெய்தல்.
எமது செயற்பணி
மக்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் இயற்கை வளங்களையும் பேணுவதன் ஊடாக தேசத்தின் நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்திக்கு பங்களிப்பை நல்குதல்.
வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் வரலாறு
வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம் ஆனது யாழ்ப்பாண குடாநாட்டின் வட பகுதியில் அமைந்துள்ளது. இப்பிரதேசமானது செழிப்பான நிலவளம், நீர்வளம் மற்றும் மனித வளம் என்பவற்றை கொண்டமைந்துள்ளது. இதன் பரப்பளவு கிட்டத்தட்ட 55.8 சதுர கிலோமீற்றர் ஆகும். இப் பிரதேசம் கொண்டுள்ள வளங்கள் அனைத்தும் வலிகாமம் வடக்கு பிரதேசத்துக்கு ஒரு தனித்துவமான மேன்மை நிலையை அளிக்கின்றது. ஆனாலும் கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையின் விளைவாக ஏற்பட்ட மக்களின் இடப்பெயர்வினாலும் உயர் பாதுகாப்பு வலயங்களின் உருவாக்கத்தினாலும் இப் பிரதேசத்தின் தனித்துவமானது பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இப்பிரதேச மக்கள் புனர்வாழ்வை நாடி நிற்பதுடன் தமது சொந்த இடங்களில் தாம் மீள் குடியமர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றனர். வலிவடக்குப் பிரதேத்தின் பிரதான வளங்களாக கடல், சுண்ணக்கற்கள் மற்றும் வளமான மண் என்பன காணப்படுகின்றன. இந்த வளங்களை ஆதாரமாகக் கொண்டு இம் மக்கள் மீன்பிடி மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் தமது வாழ்வாதாரத்துக்காக ஈடுபடுகின்றனர். மீன்பிடி துறைமுகம், காசநோய் வைத்தியசாலை, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை, காங்கேசன்துறை துறைமுகம், ஹோட்டல், புற்றுநோய் வைத்தியசாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மற்றம் பலாலி விமான நிலையம் என்பன வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் முக்கிய அமைவிடங்களாகும். மேலும் நடேஸ்வராக் கல்லூரி, யூனியன் கல்லூரி மற்றும் மகாஜனா கல்லூரி என்பன இப் பரிவில் காணப்படும் பிரபல்யமான பாடசாலைகளாகும். வரலாற்றுச் சிறப்பு மிகுந்த புனிதத் தலங்களாக மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் மற்றும் கீரிமலை நகுலேஸ்வரம் கோவில் என்பன அமைந்துள்ளன. ஆரம்பத்தில் மாவட்ட வருமான அலுவலகம் ஆனது தெல்லிப்பளை மற்றும் மல்லாகம் கிராம சபைகளை உள்ளடக்கி 15 கிராம சேவகர் பிரிவுகளுடன்இயங்கியது. காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் கீழ்வரும் மயிலிட்டி கிராமசபை நீங்களாகவும் வசாவிளான், மயிலிட்டி கிராமசபையின் எஞ்சிய பகுதிகளும் கோப்பாய் தேர்தல் தொகுதியின் கீழ் வருகின்றது. பின்னர் 1977 இல் இது வலிகாமம் வடக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக மாற்றப்பட்டது. அளவெட்டி கிராம அலுவலர் பிரிவு அளவெட்டி வடக்கு மற்றும் அளவெட்டி தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. இவ்வாறாக இது 1987 ம் ஆண்டு வரை 16 கிராம அலுவலர் பிரிவுகளுடன் இயங்கியது. 1990 ஆண்டு இவ் அலுவலகம் வலிவடக்கு பிரதேச செயலகமாக உருவாக்கப்பட்டதுடன் 45 கிராம அலுவலர் பிரிவுகள் இப் பிரதேச செயலக ஆளுகையின் வருகின்றது. தென்மராட்சி பிரிவுக்கு அடுத்ததாக வலிவடக்கு பிரதேச செயலக பிரிவானது யாழ் மாவட்டத்தில் அதிகளவு கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டதாக அமைந்துந்துள்ளது.

















