News & Events

---தேசிய போதை ஒழிப்பு வாரம்---
யூன் மாதம் 23ம் திகதியிலிருந்து யூலை மாதம் 01ம் திகதி வரை. தேசிய பாதுகாப்பிற்கு உதவுவதற்காக எங்கள் கிராமத்தை பாதுகாப்போம். எனும் தொனிப்பொருளில் மேற்படி நிகழ்ச்சியானது முதலாவது நாள் நிகழ்ச்சியாக 24.06.2019 அன்று காலை 09.00 மணியளவில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்  திருமதி. கோ. சங்கீதா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

எமது மக்களின் பெறுமதியான நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மதுசாரம் மற்றும் சிகரட் கம்பனிகளின் தந்திரோபாய ஏமாற்றும் வித்தைகளுக்கு ஏமாந்து பெறுமதியற்றவனாக சந்தோசமற்ற நிம்மதியற்ற வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஏமாளிகளை வைத்து இலாபமடைபவர்கள் சாராய பியர் மற்றும் சிகரட் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் ஆவார்.

எமது நாட்டில் ஒரு வருடத்துக்கு சராசரி 40 ஆயிரம் பேர் சாராயம், பியர், கள்ளு மற்றும் கசிப்பு போன்ற மதுசார வகைகளை குடிப்பதனால் இறப்பதாகவும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிகரட், பீடி மற்றும் சுருட்டு போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவதனாலும் மரணமடைவதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கின்றது.

சாராயம், சிகரட் பாவனையால் உடலில் நோய்த்தாக்கங்கள் மற்றும் மரணம் என்பன ஏற்படுவதுடன் அது மனிதனுக்கும் சமூகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவே இந்த கொடிய அரக்கனை எமது சமூகத்தில் இருந்து விரட்ட நாம் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் கருத்திற்கமைவாக உதவிப்பிரதேச செயளாலரின் உரையுடன் போதைப்பொருளின் அபாயம் எனும் காணொளியும்கூட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் இந் நிகழ்வில் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரும் நிர்வாக உத்யோகத்தரும் மற்றும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

IMG c508c3c8bf6166e5ee9f80f202bb55f4 V  IMG cfd451c7b2e51e1dc0bdcaa5cbf1d30c VIMG 04777f014fac4add131ddb0e2b2ca0d1 V

சமுர்த்தி பயனாளிகள் கௌரவிப்பு

 

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான கௌரவிப்பு மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல் நிகழ்வும் 18.06.2019 செவ்வாய்க் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது வாழ்வாதார உதவி வழங்கல் வீட்டுதோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்பு மற்றும் இளம் விவசாயிகளுக்கான கௌரவிப்பு ஆகியவற்றை உள்ளடக்கி நடைபெற்றது. அதனடிப்படையில் பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்பாக முதலாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 20000 மும் இரண்டாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 15000 மும் மூன்றாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 10000 வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இளம் விவசாயிகளை கௌரவிக்கும் முகமாக பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முதலாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 20000 மும் இரண்டாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 15000 மும் மூன்றாமிடம் பெற்ற பயனாளிக்கு ரூபா 10000 வழங்கி கௌரவிக்கப்பட்டது.  மேலும் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 39  வீட்டுத்தோட்ட பயனாளிகள் தலா ரூபா 5000 வீதமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் 30 சமுர்த்தி பயனாளிகளுக்கு மக்கள் பங்களிப்புடன் வாழ்வாதார உதவிகளாக விவசாய உபகரணங்களும்  வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பலபொதுமக்களும் கலந்துகொண்டனர்.

IMG ecc8818d8a5ceb2b6f6663e94f21d059 V IMG eff585b2f66aad05257da98ef30b744d V IMG d676a33e46d17b2708b59e8c1f6e827f V IMG c52d1bce1ee55f7f28d5a94471a69cfc V IMG a0f49878ce3a494a8d0290002063510b V

 

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட வாரம் மரம் நடுகை

தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு உலகம் முழுவதுமாக மே மாதம் 30 திகதியிலிருந்து யூன் 05 திகதி வரை கடைப்பிடித்துவரும் உலக தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தின் நிகழ்வாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் செயற் திட்டங்களின் மற்றுமொரு செயற்றிட்டமாக  தையிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் மர நடுகையும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் 04.05.2019 புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 

62180036 404719900125376 4190125237339160576 n  61723595 404725163458183 7878044703285837824 n61897201 404719886792044 2366461988650876928 n  61644322 404725553458144 3542688269273661440 n 61734891 404726423458057 9077017040513925120 n 62499354 404724826791550 960118756242096128 n62215283 404719483458751 2489960062395613184 n  61933246 404725616791471 2807914056072036352 n

 

 

 

சிறுவர் பூங்கா விடுவிப்பு

வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காங்கேசன்துறை மத்தி கிராம அலுவலர் (J/234) பிரிவில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ( 6.9 பேர்ச்) இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து மக்களின் பாவணைக்காக மீளவும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரத்தை இன்று காலை (10.06.2019) எமது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களிடம் 515 படைப்பிரிவின்  மக்கள் விவகார அதிகாரி கே. சத்யபால RSP அவர்களினால் உத்தியோகர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.

சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு

நாடளாவிய ரீதியில் புதிய சமுர்த்திப் பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இடம் பெறும் நிகழ்ச்சியின் ஒரு கட்டமாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 4195 பயனாளிகளிற்கு உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வு 05.06.2019 வியாழக்கிழமை தெல்லிப்பளை யூனியன் கல்லுாரியில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலளாளர் திருமதி கோ.சங்கீதா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் அவர்களும் ஏனைய பிரமுகர்களும் சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் முகாமையாளர்களும் உத்தியோகத்தர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

61740504 405166936747339 1856221849571033088 n  61760798 405167250080641 6437591029590786048 n61762095 405167243413975 2842320493619445760 n  61830695 405166943414005 4638953653393162240 n61840791 405167573413942 826396963820797952 n  61933572 405167540080612 7106733886196940800 n62087835 405166920080674 5008180150605447168 n  62217316 405167220080644 5111196642007056384 n

உட்பிரிவுகள்

குடியுரிமை சாசனம்

Scroll To Top