News & Events

மேலதிக தகவல்களுக்கு http://www.slbfe.lk/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பத்திற்கு தங்கள் பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களை நாடவும்.

Special Weather Alert

தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளின் மையப் பகுதிகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தயடைந்துள்ளது.
இது அடுத்த 24-48 மணத்தியாலத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக மேலும் விருத்தியடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் 2020 நவம்பர் 24ஆம், 25ஆம் திகதிகளில் இலங்கையின் வட கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக கிழக்கு, வடக்கு, வட-மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
வெளியிடப்பட்டது 22.11.2020 காலை 5.30 மணி

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான தைத்திருநாள் கொண்டாட்டமானது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் 2020 ம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வுகளாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களோடு அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

72வது சுதந்திர தின விழா நிகழ்வானது 4 மாசி 2020 அன்று "பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு" என்ற தொனிப் பொருளின் கீழ் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. விழாவின் ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலர் திரு. ச. சிவஸ்ரீ அவர்களால் தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டிற்கான தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக 10.01.2020, 11.01.2020, மற்றும் 12.01.2020 ஆம் திகதிகளில் ஆண்கள் பெண்களுக்கான கரப்பந்தாட்டம், எல்லே, கரம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. அனைத்து கழகங்களும் பங்குபற்றியதுடன் போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.

உட்பிரிவுகள்

குடியுரிமை சாசனம்

Scroll To Top