News & Events
- விவரங்கள்
13.10.2026 ஆம் திகதி யா/ அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதயா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கும், யா/ கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கும் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.



- விவரங்கள்
கைப்பை விற்பனை கண்காட்சி பயிற்சிநெறி இறுதிநாள் ஆன 10.10.2026 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




- விவரங்கள்
08.10.2026 ஆம் திகதி யா/ கீரிமலை நகுலேஸ்வரா பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் யா/ கட்டுவன்புலம் மகா வித்தியாலய மாணவர்களுக்கும் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.


- விவரங்கள்
08.10.2026 அன்று சிரேஷ்ட பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித்திட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. முதியோர்களுக்குப் புதிய தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்றைய நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சமூகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பொருளாதார ரீதியில் பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். பங்கு பற்றிய மூத்த பிரஜைகள் அனைவரும் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டதுடன் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தனர்.




- விவரங்கள்
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துடன் இணைந்து 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர், முதியோர் மற்றும் மாற்றுவலுவுடையோர் தின நிகழ்வு 07.10.2026 ஆம் திகதி வயாவிளான் கரிசல் பூங்காவில் நடைபெற்றது
எமது பிரதேச செயலகத்தின் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் அவர்களால் நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றித்த இவ் அங்குரார்ப்பண நிகழ்வு, சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுவலுடையோர் என அனைவரையும் அன்பாலும் மதிப்பாலும் அரவணைக்கும் சமூகத்தின் உயரிய பண்பினை எடுத்தியம்பியது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்,மாவட்ட செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்,மாவட்ட செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், முதியவர்கள், மாற்றுவலுயுடையோர் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்டோர் என சுமார் 150 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சுயதொழில் முயற்சியாளருக்கான விருதும்,மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டு மட்டத்தில் இருந்து சமூகமட்டத்தில் இணைக்கப்பட்டு சிறப்பாக செயற்படுத்திய அங்கத்தவருக்கும், மாகாண மட்ட பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுதிறனாளி பாடல் கலைஞனுக்கான விருதும், 2026 ஆம் ஆண்டு 15 மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்கிய நிறுவனம் மற்றும் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம் வந்த முதியோர் சங்கம்,முதியோர் பாட்டு போட்டியில் மூன்றாவதாக வந்த மூத்தோருக்கான விருதும் விருந்தினர்கள் கரங்களால் வழங்கப்பட்டு சிறுவர்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான மகிழ்வூட்டும் விளையாட்டு நிகழ்வுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டு .மதிய போசனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.

























