News & Events
- විස්තර


- විස්තර
சட்ட ஆவணங்களை வழங்கும் விசேட நடமாடும் சேவை
தேசிய ஒருமைப்பாடு. அரச கரும மொழிகள். சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் சட்ட ரீதியான ஆவணங்களை பொதுமக்களிற்காக இலவசமாக வழங்கும் விசேட நடமாடும் சேவை 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பி.ப 3.30 மணி வரை மல்லாகம் மகா வித்தியாலயத்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ் நடமாடும் சேவையில் பெற்றுக் கொண்ட சேவைகள்
01) பிறப்புச் சாண்றிதழ்களை சட்டரீதியாக மொழி பெயர்த்துக் கொடுத்தல்(ஆங்கிலம்/ சிங்களம் /தமிழ்)
02) பிறப்புச் சாண்றிதழ்களில் உள்ள பிழைகளை அடையாளம் கண்டு திருத்திக் கொடுத்தல்
03) பிறப்புச் சாண்றிதழின் புதிய பிரதியை வழங்குதல்
04) விவாகமாகாத தம்பதியினரை சட்டபூர்வமாக விவாகம் செய்து வைத்தல்
05) பிறப்பு சாண்றிதழ் இல்லாதவர்களிற்கு அனுமான சாண்றிதழ் வழங்குதல்
06) தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுத்தல்
07) அரச காணி தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
08) கமநல சேவை தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
09) ஊழியர் சேமலாப நிதித் தொகை விசாரணைகள், கடன் வசதி பெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
10) சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக இலவச சட்ட உதவி
11) வரிப்பணம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
12) அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
13) ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
14) நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வு
இச் சேவையின் ஊடாக மக்கள் நிறைவான பயனுள்ள சேவையினைப் பெற்றுக் கொண்டனர்.

- විස්තර
யாழ் அரச அதிபர் கிண்ணம் 2019
யாழ் அரச அதிபர் கிண்ணம் 2019 இறுதிப் போட்டி 01.08.2019 அன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச அதிபர் மதிப்பிற்குரிய திருவாளர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் பிரதம அதீதியாக கலந்து சிறப்பிக்க மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் அரச அதிபர் போட்டியில் யாழ் மாவட்டச் செயலகமும் 15 பிரதேச செயலகங்களும் போட்டிகளில் கலந்து கொண்டன. இப் போட்டிகளின் புள்ளிகளின் அடிப்படையில் யாழ் மாவட்டச் செயலகம் முதலாமிடத்தையும் எமது தெல்லிப்பளை பிரதேச செயலகம் 2ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது. எமது பிரதேச செயலகம் எமது பிரதேச செயலாளர் திரு ச. சிவஶ்ரீ அவர்களின் வழிகாட்டலிலும் ஊக்கப்படுத்தலிலும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பிலும் தொடர்ச்சியாக 3 வருடங்களாக 2 ம் இடத்தினையும் பிரதேசங்களின் மத்தியில் 1ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



- විස්තර
மயிலிட்டி வடக்கு கிராமச் செயலகம் புதிய கட்டடம் திறப்பு
மீள்குடியேற்றப் பகுதியான மயிலிட்டி வடக்கு பகுதி மக்களின் சேவைகளை நிறைவேற்றுமுகமாக அப்பகுதி மக்களுக்கான கிராமச் செயலகம் 27.08.2019 அன்று பாவனைக்காக திறந்து வைக்கப்பட;டுள்ளது.
இந் நிகழ்வானது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு நா. வேதநாயகன் அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அக் கட்டடத்தினை மக்கள் பாவனைக்காகவும் திறந்து வைத்து உரையாற்றினார்.
இக் கட்டடமானது 6.5 மில்லியன் நிதிப் பங்களிப்பில் UNDP நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பரதேச செயலாளர் திருமதி ச. கோகுலதர்சன் மற்றும் கணக்காளர் ப. கஜேந்திரன் அவர்களும் மற்றும் UNDP நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு. முகுந்தன் அவர்ளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- විස්තර
மாவட்டத்தின் சிறந்த செயற்றிட்டத்திற்கான விருது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் "youth with talent சிரமசக்தி செயற்திட்டம்'" 2018 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கல் விழாவில் தெல்லிப்பளை பிரதேசத்தின் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் செயற்படுத்திய "கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்திற்கான இளைப்பாறு மண்டபம் அமைத்தல் "எனும் செயற்திட்டம் முதலாம் இடத்தினைப் பெற்றமைக்காக இச் செயற்திட்டத்தினை தெரிவு செய்து இளைஞர் சேவை உத்தியோகத்தரையும் இளைஞர் கழகத்தினரையும் நெறிப்படுத்தியமைக்காக மதிப்புக்குரிய எமது பிரதேச செயலாளர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கும் நிகழ்வு 19.07.2019 அன்று நடைபெற்றது.

















