News & Events
- විස්තර
உளநல நாளை முன்னிட்டு 16.10.2026 நடாத்தப்பட்ட நிகழ்விற்கான "பாராட்டுதல் பரிசளித்தல் மகிழ்வூட்டலும்" நிகழ்வு 23.10.2026 அன்று FAIRMED அனுசரணையில் நல்லிணக்கபுரத்தில் நடைபெற்றது.



- විස්තර
23.10.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றிருந்த 2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு விழாவில் நமது பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த மூத்த கலைஞர் ஆன சங்கரப்பிள்ளை கிருபானந்தன் அவர்கள் இசை நாடக துறைக்கான “யாழ் முத்து” விருதினையும் இளவாலை வடக்கை சேர்ந்த பிரான்சிஸ் சகாயநாதன் ஆண்டனி ரோய் அவர்களுக்கு வாத்திய கலைக்கான “இளம் கலைஞர்” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இதழ் 5 மலர் வெளியீடும் இடம் பெற்றிருந்தது இதில் எமது பிரதேசத்தில் எழுத்தாளர்களான கோகிலா மகேந்திரன் மற்றும் கோபிகா ஆகியோர்களுடைய கட்டுரைகளும் கொல்லங்கட்டியைச் சேர்ந்த குக தேவன் அவருடைய கவிதை ஒன்று நூலில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்வில் ஊர்வலங்களில் எமது மாவை பொதுச் சேவை கழகத்தினுடைய கலைஞர்களுடைய கோலாட்ட நிகழ்வும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.




- විස්තර
நிறம் தீட்டலும் மனநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தலும் தொடர்பாக உளநலநாள் நிகழ்வு 16.10.2026 ஆம் திகதி நல்லிணக்கபுர சிறார்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.




- විස්තර
2026.10.23 ஆந் திகதி யா/ நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.


- විස්තර
நேர்மையான அரசாங்க சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் , " தகவல் அறியும் உரிமைச் சட்டம்" தொடர்பாக யா/ வசாவிளான் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 16.10.2026 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
















