இளைஞர்களின் தொழில்திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “Door to Door Skills Campaign” நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்ட நிகழ்வு 2026.10.30 அன்று   மாலை. 3.30 மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் அவர்களின் ஏற்பாட்டில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான திரு. சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 18–25 வயதுக்குட்பட்ட தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களின் ஆர்வம் மற்றும் திறன்களுக்கு ஏற்ப தொழிற்பயிற்சிகளை வழங்கி அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளது.

இதற்காக கிராம மட்டத்தில் வீடு வீடாகச் சென்று இளைஞர்களின் தேவைகளை அடையாளம் கண்டு, பொருத்தமான தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் அவர்களை இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர், தொழிற்பயிற்சி நிறுவனப் பிரதிநிதிகள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், ஏனைய துறைசார் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

door to door3door to door1door to door2door to door4door to door5door to door

Scroll To Top