சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” நிகழ்ச்சித்திட்டத்தில் 08.08.2026 ஆந் திகதி கீரிமலை கடற்கரையை தூய்மைபடுத்தும் செயற்பாடு நடைபெற்றது.
இதில் கௌரவ பாரளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமாகிய,வைத்திய நிபுணா் ஸ்ரீ பவானந்தராஜா அவா்களும் கடற்படையினரும் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டசிரமதான பணியில் ஈடுபட்டனர் .


























