இலவச மருத்துவ முகாம் - குரும்பசிட்டி

மத்திய அரசின் முதியோரகளுக்கான தேசிய செயலகத்தினதும் , தெல்லிப்பளை வைத்திய சுகாதார அதிகாரி பணிமனையினதும் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் இணை அனுசரணையுடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட  முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 27.05.2019  திங்கட்கிழமை காலை 8.00 முதல் 01.00 மணி வரைக்கும்  குரும்பசிட்டி கலைஞானி கலாசார மண்டபத்தில்  இடம்பெற்றது. இதில் J/242, J/243 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்நத 60 இற்க மேற்பட்ட முதியவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.  இம் முகாமில் இரத்தப் பரிசோதனை , கண் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை மருத்துவ அறிக்கை, வாய் சுகாதாரம், இரத்த அழுத்தம் ,தொற்றாநோய்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை வழங்குதல்  போன்ற பல இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.

111112113114115116

Scroll To Top