13.10.2026 தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரிக் குழுவினருக்கு வரவேற்பளித்தல் நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகம் மற்றும் முதியோர் செயலகம் ஆகியன இணைந்து தேசிய முதியோர் மாதத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்த 1890 - முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரி நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, 13.10.2026 அன்று 12 பேர் கொண்ட சைக்கிள் சவாரிக் குழுவினர் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்ததிருந்தார்கள்.
இப் பயணத்தின் முக்கிய நோக்கங்களாக, முதியோருக்கான அவசர உதவிச் சேவையின் 1890 என்ற தொலைபேசி இலக்கம் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் முதியோர் உரிமைகள், நலன்கள் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தல் ஆகியன தொடர்பான நட்புறவுடன் கூடிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
முதியோரை மதித்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, கண்ணியமான முதுமை வாழ்வை உறுதிப்படுத்துவதுடன், முதியோர் நலன் தொடர்பான விழிப்புணர்வை சமூக மட்டத்தில் வலுப்படுத்துவதும் வகையில் இவ் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.





















