UNDP நிறுவனத்தின் உதவியில் வாழ்வாதாரக் உதவிக்கொடுப்பனவு

UNDP நிறுவனத்தின் RNRL நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மற்றும் EU  நிகழ்ச்சித் திட்டத்தின் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளின் தொடர்ச்சியான வாழ்வாதார உதவியாக J/254 கிராம அலுவலர் பிரிவில் 07 பயனானிகளுக்கும் மற்றும் J/250 கிராம அலுவலர் பிரிவில் 01 பயனானிக்குமாக மொத்தம் 08 பயனாளிகளுக்கான மீன்பிடி படகின் வெளி இணைப்பு இயங்திரங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் நோக்கமாக அப் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேலும் மேம்படுத்துவதற்காகவே இவ் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. ஒரு இயந்திரத்தின் பெறுமதியானது ரூபா 300.000.00 (மூன்று இலட்சம்) ஆகும். 

அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்ட வாழ்வாதார உதவியில் மீள்குடியேறாத மற்றும் வீட்டுத் திட்டங்களை பூர்த்தியாக்காத பயனாளிகளுக்கான தடுத்துவைக்கப்பட்ட ரூபா 150.000.00 பெறுமதியான வலைத்தொகுதியொன்றும் எமது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களின் தலமையில் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் எமது பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளரும் மற்றும் உத்தியோகத்தர்களுடன் UNDP நிறுவனத்தின்  அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

01020304050607080910

.

குடியுரிமை சாசனம்

Scroll To Top